அசரன்கா, ஜெகோவிக் சாம்பியன்
ஆஸ்திரியாவில் நடந்த டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அசரன்கா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஜெர்மனி வீராங்கனை ஜூலியாவை வீழ்த்தி பட்டம் வென்றார். ஜப்பானில் நடந்த டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து வீராங்கனை ஹீதர் வாட்சன் 7-5, 5-7, 7-6(4) என்ற செட் கணக்கில் தைவானின் ஷாங்காய் சென்னை வீழ்த்தி பட்டம் வென்றார்.சீனாவில் நடந்த ஷாங்காய் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்தில் ஜெகோவிக் 5-7, 7-6(11), 6-3 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் ஆன்டிமுரேயை வீழ்த்தி பட்டம் வென்றார். இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் - ஸ்டெபனக் ஜோடி 6-7(7), 6-3, 10-5 என்ற செட் கணக்கில் இந்தியாவின் மகேஷ்பூபதி - போபண்ணா ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது.