சுழற்பந்து எடுபடாததால் தோல்வி : ஹர்பஜன்
சாம்பியன்லீக் 20-20ல் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஆட்டத்தில் லயன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஜாண்சன் 30, ரோகித்சர்மா 27, ஸ்மித் 26, கார்த்திக் 19, டெண்டுல்கர் 16 ரன் எடுத்தனர். அதன்பின் விளையாடிய லயன்ஸ் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 18.5 ஓவரில் 158 ரன் எடுத்து வெற்றி பெற்றது. டிஹாக் 51, மெக்கன்ஸி 68 ரன் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தனர்.
இந்த தோல்வி குறித்து ஹர்பஜன் கூறும்போது, எங்களது சுழற்பந்து எடுபடாததால் தோல்வி கிடைத்தது. மெக்கன்ஸி சிறப்பாக விளையாடினார். எங்களது அணியில் ஜாண்சன் மட்டுமே நன்றாக விளையாடினார். மொத்தத்தில் எங்களைவிட லயன்ஸ் அனைத்து விதத்திலும் சிறப்பாக விளையாடியது. அவர்களுக்கு மைதானத்தின் தன்மையும் நன்றாக தெரிந்தது. வெற்றிக்கு உரியவர்கள் அவர்கள். நாங்கள் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்றார்.