சோளிங்கர் :வேலூர் மாவட்டம் சோளிங்கர் எம்.எம். நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(31). இவர் 12 பவுன் நகைகளை அடகு வைப்பதற்காக சோளிங்கர் சுப்பாராவ் தெருவில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றார். வங்கி கணக்கு மனைவி பெயரில் உள்ளதால் அவரை தயாராக இருக்கும்படி செல்போனில் தகவல் தெரிவித்தார். தனது பைக்கின் பெட்ரோல் டேங்க் கவரில் நகைகளை வைத்துவிட்டு புறப்படும்போது, அங்கு வந்த ஒரு ஆசாமி, மணிகண்டனிடம் Ôஅவசரமாக போன் செய்ய வேண்டும்’ என்று கூறி செல்போனை வாங்கி பேசியுள்ளார். சிறிது நேரம் கழித்து செல்போனை திருப்பி கொடுத்து விட்டு வேகமாக சென்றுவிட்டார். பின்னர் பைக் கவரில் பார்த்தபோது அதில் வைத்திருந்த 12 பவுன் நகைகள் மாயமானதை கண்டு மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook