Untitled Document
2011
15
Mar
காமன்வெல்த் முறைகேடு : கல்மாடியிடம் 2வது முறையாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

புதுடெல்லி: காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக போட்டி அமைப்புக் குழு முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடியிடம் 2வது முறையாக இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த காமன்வெல்த் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதில் ரூ.8 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். போட்டி அமைப்புக் குழு தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி மீதும் புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவரது பதவி பறிக்கப்பட்டது. காமன்வெல்த் முறைகேடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் 8 எப்ஐஆர்பதிவு செய்துள்ளனர். ஆனால் இதில் எதிலும் கல்மாடி பெயர் இல்லை.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கல்மாடியின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது. பின்னர் கடந்த ஜனவரி 5ம் தேதி சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

கடந்த மார்ச் 11ம் தேதி 5 பேர் கொண்ட சிபிஐ குழு அதிரடியாக கல்மாடிக்கு சொந்தமான 2 வங்கி லாக்கர்களில் சோதனை நடத்தியது. பின்னர் 2 லாக்கர்களையும் சீல் செய்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் சிபிஐ அதிகாரிகள் கல்மாடியிடம் விசாரணை நடத்தினர். இதற்காக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு கல்மாடி சென்றார். காமன்வெல்த் போட்டி தொடர்பாக சுவிஸ் வங்கியுடன் ரூ.107 கோடிக்கு போட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக போட்டிக்குழு செயலாளர் லலித் பனோட் மற்றும் இயக்குனர் விகே.வர்மா ஆகியோர் கடந்த பிப்ரவரியில்  கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் கல்மாடிக்கு நெருக்கமானவர்கள் ஆவார்கள். இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கல்மாடியிடம் இன்று விசாரித்தனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me