இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 10 ஜட்ஜ் அட்வகேட் ஜெனரல் பணிக்கு தகுதி யானவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: ஜட்ஜ் அட்வகேட் ஜெனரல் 10 இடங் கள். சம்பளம்: ரூ.15,600 39,100. வயது: 21 முதல் 27க்குள். தகுதி: குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் எல்எல்பி அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் 5 வருட சட்டப்படிப்பு. இதை பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். உடல்தகுதிகள்: உயரம் (ஆண்கள்): 157.5 செ.மீ., பெண்கள் 152 செ.மீ., 2.4 கி.மீ., தூரத்தை 15 நிமிடங்களில் ஓடி முடித்தல், புஷ் அப்15, சிட்அப் 25, சின்அப்ஸ்6, கயிறு ஏறுதல் 3.4 மீட்டர் ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும். நேர்முகத்தேர்வு, குழுவிவாதம், உளவியல் தேர்வு, உடற்தகுதி, மருத்துவதகுதி ஆகியவற் றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். கூடுதல் விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.12.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook