வேலூர்: காட்பாடி தாலுகா சேர்க்காடு தாதிரெட்டிப்பல்லியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி முடிந்ததும், 10ம் வகுப்பு மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. நேற்று மாலையில் சிறப்பு வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு கிடைத்த இடைவெளியில் மாணவிகள் சிலர் வெளியே சென்றனர். அருகில் உள்ள காட்டாமணக்கு செடியில் இருந்து விதைகளை பறித்த அவர்கள், அவற்றை தின்றுள்ளனர். மேலும், அதில் உள்ள சில விதைகளை பார்வையற்ற ஆசிரியர் மோகன் (25) என்பவருக்கும் கொடுத்துள்ளனர். இதில் மாணவிகள் லாவண்யா, பவன்யா, மலர், கீதா, ரமாதேவி, நர்மதா, கலைவாணி, சினேகா, சங்கீதா ஆகிய 9 பேருக்கும், ஆசிரியர் மோகனுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour">