செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நல்லான்பிள்ளைபெற்றாள் காவல் நிலைய எஸ்.ஐ. ராஜீவ்காந்தி, நேற்றிரவு 8 மணியளவில் செஞ்சி அடுத்த கடலாடிகுளம் பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டார். அங்கு சாராயம் விற்றுக் கொண்டிருந்த கடலாடிகுளம் அதிமுக கிளை செயலாளர் தாஸ் (30), சேகர் ஆகியோர் எஸ்ஐயை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை ராஜீவ்காந்தி மடக்கிப் பிடிக்க முயன்றார். அப்போது தாஸ் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் திடீரென எஸ்.ஐ.யை கழுத்து, கையில் குத்தி விட்டு தப்பி ஓடினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தாஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள சேகரை தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour">