மத்திய அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியானவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. 1. ஜூனியர் பிசினஸ் அசிஸ் டென்ட்: மொத்த இடங்கள்&65 (இதில் தமிழ்நாட்டுக்கு 4 இடங்களும், கர்நாடகாவுக்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.) தகுதி: 50 சதவீத தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பட்டம். கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 40 வார்த்தைகள் (இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 35 வார்த்தைகள்) டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும். மேலும் எம்எஸ் வேர்டு மற்றும் எக்சலில் பணியாற்றும் திறன் விரும்பத் தக்கது. 2. ஜூனியர் ஆபரேட்டர்& கிரேடு&1: மொத்த இடங்கள்:160. இதில் தமிழ்நாட்டுக்கு 25 இடங்களும் (பொது&13, ஓபிசி&7, எஸ்சி&5), கர்நாடகாவுக்கு 6 இடங்களும் (பொது&3, ஓபிசி&2, எஸ்சி&1) ஒதுக் கப்பட்டுள்ளன. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், பிட்டர் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் இரண்டு வருட ஐடிஐ படிப்பு. 3. ஜூனியர் சார்ஜ்மென்: மொத்த இடங்கள்&40. இதில் தமிழ்நாட்டுக்கு 15 இடங்களும், கர்நாடகாவுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத் தில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரு மென்டேஷன், மெக் கானிக்கல் ஆகிய ஏதேனும் ஒரு பாடத்தில் 3 வருட டிப்ளமோ. அனைத்து பணிகளுக்கும் 1.2.2025 தேதியின்படி பயிற்சிக் காலம் தவிர்த்து தொடர்புடைய பிரிவில் ஒரு வருட பணி அனுபவம். இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 8 மாதங்கள் பணி அனுபவம் பெற்றிருந்தால் மட்டும் போதுமானது. வயது: (அனைத்து பணிகளுக் கும்): 1.2.2011ன்படி 18 லிருந்து 32க்குள். இடஒதுக்கீட்டு பிரிவின ருக்கு வயதுத் தளர்வு உண்டு. விண்ணப்ப கட்டணம்: u100ஐ மிஸீபீவீணீஸீ ளிவீறீ சிஷீக்ஷீஜீஷீக்ஷீணீtவீஷீஸீ லிவீனீவீtமீபீ, விஞி என்ற பெயருக்கு மும்பையில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: றிளிஷிஜி ஙிளிஙீ ழிளி:7736 ஙிளிஸிமிக்ஷிகிலிமி (கீணிஷிஜி), விஹிவிஙிகிமி 400 092. விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள்: 19.3.2011. தேர்ந்தெடுக்கப்படும் முறை , மாதிரி விண்ணப்ப படிவம் உள்ளிட்ட விவரங்களுக்கு ஷ்ஷ்ஷ்.வீஷீநீறீ.நீஷீனீ இணையதளத்தை பார்க்கவும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook