பூச்சிகள் ஆராய்ச்சி மையத்தில் பிஎஸ்சி பட்டதாரிகளுக்கு வேலை
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் மதுரையில் செயல்படும் பூச்சிகள் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள ரிசர்ச் சயின்டிஸ்ட், டெக்னிக்கல் ஆபீசர், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. ரிசர்ச் சயின்டிஸ்ட்: 1 இடம். சம்பளம்: ரூ.33,306, வயது: 1.7.2012ன்படி 35க்குள். தகுதி: Life Sciences/ Entomology/Zoology ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டம் மற்றும் கம்ப்யூட்டர் இயக்கும் திறன்.
2.Technical Officer ‘A’ :2 இடங்கள். சம்பளம்: ரூ.9,30034,800. வயது: 35க்குள். தகுதி: Life Sciences/Zoology பாடங்களில் 3 வருட பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட உயிரியல் துறையில் பணி அனுபவம் பெற்றிருப்பது அல்லது கூடுதல் தகுதி பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
3.Technical Assistant : 1 இடம்: சம்பளம்: ரூ.9,30034,800. வயது:30க்குள் தகுதி: Life Sciences / Zoology பாடத்தில் 3 வருட பட்டப்படிப்புடன் DMLT படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.icmr.nic.in இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.28.