ரூ48 லட்சத்தில் தீயணைக்கும் நவீன இயந்திரங்கள்
சென்னை :தீயை அணைப்பதற்கு நுரை பீய்ச்சி அடிக்கும் நவீன இயந்திரங்களை ரூ.48 லட்சத்தில் வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பலமாடி கட்டிடங்களில் தீப்பற்றிக் கொண்டால் நுரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள பழைய இயந்திரங்களுக்குப் பதில் புதிதாக 2 நுரை பீய்ச்சும் நவீன இயந்திரங்களை ரூ.48 லட்சத்தில் வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதலை நிதிநிலைக்குழு தீயணைப்புத் துறைக்கு அளித்துள்ளது. இந்த டெண்டர்கள் ஒளிவுமறைவற்ற முறையில் விடப்படும். இந்த தகவலை உள்துறை தெரிவித்துள்ளது.