ரயிலில் அடிபட்ட வாலிபரின் துண்டிக்கப்பட்ட கையை பார்த்த அரசு டாக்டர் மயங்கி விழுந்தார்
மணப்பாறை :திருச்சி அருகே ரயிலில் அடிபட்டு வாலிபரின் கை துண்டானது. வாலிபரையும், துண்டிக்கப்பட்ட கையையும் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். இதைப்பார்த்த டாக்டரே மயங்கி விழுந் தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கை வைத்தபடி பிளாட்பாரத்துக்கு இடையே ஒரு வாலிபர் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் மயங்கி கிடந்தார். அவர் மீது சென்னை சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் அவரது கை துண்டானது. அவரை 108 ஆம்புலன்சில் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பணியில் இருந்த டாக்டர், வாலிபரின் கையை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தனியாக எடுத்து வந்ததை பார்த்ததும் மயங்கி விழுந்தார். இதையடுத்து டாக் டருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. கை துண்டான வாலிபரை மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென் றனர். திருச்சி ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் கை துண்டான வாலிபர் சென்னை கும்மிடிபூண்டியை சேர்ந்த தனசேகர்(31) என்பது தெரியவந்தது. அவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து மயங்கி கிடந்தாரா என விசாரணை நடக்கிறது.