நியூசி.க்கு எதிரான முதல் ஒன்டே : வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
வெஸ்ட் இண்டீஸ் , நியூசிலாந்து அணிகள் நேற்று முதல் ஒருநாள் போட்டியில் ஜமைக்காவில் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்தது. வாட்லிங்க் 98 பந்தில் 5 பவுண்டரியுடன் 60 ரன் எடுத்தார். ஜேக்கப் ஓரம் 32, வில்லியம்சன் 24, எலிஸ் 14, நிக்கோல் 14 ரன் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரசல் 4, சுனில் நரேன், ராம்பால் தலா 2, சமி ஒரு விக்கெட் வீழ்த்தினர். எளிதான இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பின்னர் 33 ஓவரில் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 24.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 136 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கெய்ல் 57 பந்தில் 5 சிக்சர், 4 பவுண்டரியுடன் 63 ரன்னும், ஸ்மித் 77 பந்தில் 3 சிக்சர், 6 பவுண்டரியுடன் 65 ரன்னும் விளாசினர். ஆட்டநாயகன் விருது ரசலுக்கு வழங்கப்பட்டது. 5 போட்டி கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 1,0 என முன்னிலை வகிக்கிறது.