மினி உலககோப்பை கால்பந்து போட்டி என அழைக்கப்படும் யூரோ கால்பந்து போட்டிகள் வருகிற 8ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இம்முறை போட்டியை இணைந்து நடத்துகின்றன. ஐரோப்பிய கண்டங்களை சேர்ந்த நாடுகள் மட்டும் பங்கேற்கும் இந்த தொடர் உலககோப்பை கால்பந்து போட்டிக்கு பிறகு மிகவும் பிரபலமானது. மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. போலந்து, கிரீஸ், ரஷ்யா, செக்குடியரசு ஆகிய நாடுகள ஏ பிரிவிலும், பி பிரிவில் ஆலந்து, டென்மார்க், ஜெர்மனி, போர்ச்சுக்கல் ஆகிய அணிகளும், சி பிரிவில் ஸ்பெயின், இத்தாலி, அயர்லாந்து, குரோஷியா ஆகிய அணிகளும், டி பிரிவில் உக்ரைன், சுவீடன், பிரான்ஸ், இங்கிலாந்து அணிகளும் இடம்பிடித்துள்ளன. 8ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் போலந்து கிரீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் ஆட்டங்கள் ஜூன் 19ம் தேதி வரை நடக்கிறது. காலிறுதி சுற்று 21, 22, 23, 24ம் தேதிகளிலும், அரையிறுதி 27, 28ம் தேதியும் நடக்கிறது. இறுதிப்போட்டி ஜூலை 1ம் தேதி நடக்கிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook