அடையாறு பங்களாவில் நள்ளிரவில் நடிகர், நடிகைகள் குத்தாட்டம்
சென்னை அடையாறு பங்களாவில் நள்ளிரவு பார்ட்டியில் நடிகர், நடிகைகள் குத்தாட்டம் போட்டதால பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் நடந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் இறுதி போட்டி நேற்று முன்தினம் நடந்தது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியை காண கொல்கத்தா அணி ஓனர் ஷாருக்கான் சென்னை வந்தார். அவருக்கு சிறப்பு விருந்தளிக்க முடிவு செய்தார் பிரபுதேவா. போட்டி முடிந்ததும் அடையாறு போட் கிளப்பில் உள்ள தனது பங்களாவுக்கு ஷாருக்கான் மற்றும் அந்த அணியின் ஆதரவாளர்களுக்கு நள்ளிரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்தியில் ‘ரவுடி ரத்தோர்Õ என்ற படத்தை பிரபு தேவா இயக்கியுள்ளார். அந்த குழுவினருக்கும் பிரபுதேவாவுக்கு நெருக்கமான நடிகர், நடிகைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. சரியாக நள்ளிரவில் விருந்து நிகழ்ச்சி தொடங்கியது. கிரிக்கெட் போட்டியில் டி20 கோப்பை வென்ற மகிழ்ச்சியுடன் மைதானத்திலிருந்து நேராக பிரபு தேவா வீட்டுக்கு வருகை தந்தார் ஷாருக். இதற்கிடையில் விழாவில் பங்கேற்க விஜய், சிம்ரன் கணவர் தீபக்,
பிரசன்னா,சினேகா, பிரகாஷ்ராஜ்,போனி கபூர், ஜெயம் ரவி,ஆர்த்தி, கிரிஷ்,சங்கீதா, சித்தார்த், திவ்யா, விவேக், செல்வராக வன்,கீதாஞ்சலி, த்ரிஷா, லட்சுமி மன்சு, சுதீப், ராணா, சோனியா, பிரியா ஆனந்த், சுந்தர்.சி, சார்மி, பூனம்கவுர், ரவுடி ரத்தோர் பட குழுவினர் அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா மற்றும் தயாரிப்பாளர் சபரினா கான் ஆகியோர் வந்திருந்திருந்தனர். அனைவரும் ஷாருக் கான் வருகைக்காக காத்திருந்தனர். அவர் வந்தவுடன் ஆரவாரமாக கோஷம்போட்டு கைதட்டி வரவேற்றனர். அவருடன் ஜூஹி சாவ்லா, ரிதேஷ்,ஜெனிலியா, சாஜித் கான், சங்க்கே பாண்டே, சஞ்சய் கபூர் வந்தனர்.
பின்னர் தடபுடலாக விருந்து தொடங்கியது. அப்போது ‘ரவுடி ரத்தோர்Õ படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்த ‘சிங்கா டா டாÕ என்ற பாடல் ஒலிபரப்பினார்கள். இசைக்கு ஏற்ப ஷாருக்கான், பிரபு தேவா, அக்ஷய் குமார் நடனம் ஆடினார்கள். அவர்களுடன் சேர்ந்து மற்றவர்களும் நடனம் ஆடினர். உற்சாகத்துடன் விடிய விடிய விருந்து நடந்தது. நடிகர், நடிகைகள் உற்சாக பானத்தி லும் மிதந்ததாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவித்தன.