வயதாகி விட்டால் ஓய்வுபெற வேண்டும்: திக்விஜய் சிங் பேச்சு
போபால்: என் வயது உள்ளவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் பேசினார். மத்திய பிரதேசத்தில் பாஜ அரசின் ஊழலை கண்டித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங்கின் மகன் ஜெய்வர்தன் யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரை தர்மவாடா கிராமத்தில் நேற்று நிறைவடைந்தது. அதில் திக்விஜய் சிங் பேசுகையில், ‘நாங்கள் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டி விட்டோம். எனவே என் வயதை அடைந்த தலைவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும். இளைஞர்களும் அரசியலில் ஆர்வமுடன் பங்கேற்க முன்வர வேண்டும் என்றார். எனினும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கட்சி டிக்கெட் கொடுத்தால் போட்டியிடுவேன். சட்டசபை தேர்தலில் எனது மகன் ஜெயவர்தனுக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டால் அவரும் போட்டியிடுவார். மத்திய பிரதேசத்தில் கடந்த 8 வருடங்களாக நடந்து வரும் பாஜ ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது என்று திக்விஜய் சிங் பேசினார்.