Untitled Document
2012
09
May
மும்பை,பெங்களூர் இன்று பலப்பரீட்சை


ஐபிஎல்லில் இன்று ஒரேயொரு ஆட்டம் மட்டுமே நடக்கிறது. இரவு 8 மணிக்கு வான்கடே மைதானத்தில் மும்பை , பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்குமே இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அரையிறுதிக்கு முன்னேற அடுத்தடுத்து வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற நெருக்கடி இரு அணிக்கும் உள்ளது. இந்த சீசனில் இரு அணிகளும் முதல் முறையாக சந்திக்கின்றன. மும்பை அணி 11 ஆட்டத்தில் 7 வெற்றி, 4 தோல்விகளை பெற்றுள்ளது. கடைசியாக சென்னை அணியை வீழ்த்திய தெம்புடன் களமிறங்குகிறது. சச்சின் பார்மிற்கு திரும்பியிருப்பது வலுசேர்க்கிறது. அதிரடி நாயகனாக வெய்னி ஸ்மித் உருவெடுத்துள்ளார். பொல்லார்டு காயத்திலிருந்து குணமடைந்துள்ளதால் இன்று களமிறங்க வாய்ப்புள்ளது. பிராங்கிளின், ரோகித் சர்மா, அம்பாதி ராயுடு ஆகியோரும் பேட்டிங்கில் அதிரடி காட்டினால்  வலுவான ஸ்கோரை குவிக்கலாம். மலிங்காவின் அனல் வேகம், ஓஜாவின் சுழல் நெருக்கடி கொடுக்கும்.

பெங்களூர் அணி 11 ஆட்டத்தில் தலா 5 வெற்றி, 5 தோல்விகளை பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. கெய்ல் வழக்கமாக அதிரடி மன்னனாக வலம் வருகிறார். டிவில்லியர்ஸ் எந்த கட்டத்திலும் போட்டியின் முடிவை தன்பக்கம் இழுப்பவராக உள்ளார். தில்ஷானும் பேட்டிங்கிற்கு பலமாக உள்ளார். இவர்களை நம்பி தான் பேட்டிங் உள்ளது. இந்த மூவர் கூட்டணியே அணியின் வெற்றியை தீர்மானிப்பதாக இருக்கிறது. இவர்களுடன் கோக்லி, மயங்க் அகர்வால் ஆகியோர் அசத்தினால் சவால் கொடுக்கலாம். பந்துவீச்சு பலவீனமாக உள்ளது. ஜாகீர்கான், வெட்டோரி ஆகியோர் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை. பேட்டிங்கை நம்பியே பெங்களூர் அணி இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது.

ஐசிசி வலையில் 170 சூதாட்ட தரகர்கள்

இலங்கையில் வருகிற செப்டம்பர் மாதம் உலக கோப்பை 20,20 நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடரின் போது நடிகைகள் மற்றும் மாடல் அழகிகளை பயன்படுத்தி சூதாட்ட தரகர்கள் சூதாட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து ஐசிசி ஊழல் தடுப்புக்குழு டெல்லி போலீசாருடன் ஆலோசனை நடத்தியது. அப்போது குறிப்பிட்ட நாளில் 170 சூதாட்ட தரகர்கள் வெவ்வேறு விமானங்களில் இலங்கை சென்று வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் யார் யார் என்பது குறித்து தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,