ஐபிஎல்லில் நேற்றிரவு பஞ்சாப் , ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் ஆடிய பஞ்சாப் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன் குவித்தது. மன்தீப் சிங் 48 பந்தில் 3 சிக்சர், 8 பவுண்டரியுடன் 75 ரன் விளாசினார். டேவிட் மில்லர் 28, மார்ஷ் 22, டேவிட் ஹசி 16, அசார் முகமது 14 ரன் எடுத்தனர். ஐதராபாத் தரப்பில் ஆசிஸ் ரெட்டி 2, தவான், பிரதாப் சிங் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஹாரிஸ் 30, ஷிகார் தவான் 8, பார்த்திவ் பட்டேல் 17, கேமரூன் ஒயில் 8, சங்ககரா 4, ரெட்டி 24, ஜூகுன் ஜூவாலா 19, ஆசிஸ் ரெட்டி 8, தெரோன் 7, அமித் மிஸ்ரா 8 ரன் எடுத்தனர். பஞ்சாப் தரப்பில் ஹசி, ஆவ்னா, பிரவீன்குமார் தலா 2, சாவ்லா 1 விக்கெட் கைப்பற்றினர். இதனால் பஞ்சாப் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 6வது வெற்றி ஆகும். ஐதராபாத் 9வது தோல்வியை பெற்றது. ஆட்டநாயகன் விருது மன்தீப் சிங்கிற்கு வழங்கப்பட்டது.
கேப்டன்ஸ் கார்னர் டேவிட் ஹசி : ஆரம்பத்திலேயே பேட்ஸ்மேன்கள் அசத்தினர். மன்தீப் சிங் அணியின் வலிமையை அதிகரித்துள்ளார். அவருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. உள்ளூர் மைதானங்களில் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறோம். வரும் ஆட்டங்களில் இதற்கு முடிவு கட்டுவோம். சங்ககரா : முதல் 4 ஓவர் தான் ஆட்டத்தின் முடிவையே மாற்றியது. இந்த கட்டத்தில் எங்களது பந்து வீச்சு சரியாக அமையவில்லை. அதே சமயத்தில் பஞ்சாப் அணி நேர்த்தியான திசையில் பந்துவீசி நெருக்கடி கொடுத்தது. மன்தீப் சிங் அருமையாக ஆடினார்.
ஹீரோ கார்னர் ஆட்ட நாயகன் விருது பெற்ற மன்தீப்சிங் கூறுகையில், ஹசி என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். இன்றைய ஆட்டம் திருப்தியாக இருந்தது. அணிக்காக மேலும் ரன் சேர்ப்பேன் என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook