ஜோகோவிக் வெற்றி ஸ்பெயினின் மாட்ரீட் நகரில் நடந்து வரும் டென்னிஸ் போட்டி முதல் சுற்றில் நம்பர் 1 வீரரான செர்பியாவின் ஜோகோவிக் 6,2, 2,6, 6,3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் டிரேவரை வீழ்த்தினார்.
காம்பீருக்கு அபராதம் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதாக கொல்கத்தா அணி கேப்டன் காம்பீருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அனாஇவானோவிக் அசத்தல் ஸ்பெயின் டென்னிஸ் 2வது சுற்றில் செர்பியாவின் அனா இவானோவிக் 7,5, 6,1 என்ற கணக்கில் ரஷ்யாவின் நடியா பெட்ரோவாவையும், டென்மார்க்கின் வோஸ்னியாக்கி 6,4, 7,6 என்ற கணக்கில் ஜெர்மனியின் மோனாவையும் வீழ்த்தினர். மற்ற ஆட்டங்களில் ஷரபோவா (ரஷ்யா), செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
சேப்பாக்கத்தால் ரூ.1.5 கோடி நஷ்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 கேலரிகளுக்கு மாநகராட்சி ஒப்புதல் வழங்காததால் 12 ஆயிரம் இருக்கைகளுக்கான டிக்கெட் விற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் ரூ.1.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இறுதி போட்டியை வேறு மைதானத்திற்கு மாற்றுவது குறித்து தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook