ஐதராபாத்துடன் இன்று மோதல் வெற்றி முனைப்பில் பஞ்சாப்
ஐபிஎல்லில் இன்று இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் , ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் அணி 11 ஆட்டத்தில் 8 தோல்விகளை பெற்றுள்ளது. அந்த அணி தொடரில் இருந்து வெளியேறி விட்டதால் இன்றைய ஆட்டத்தின் முடிவு அந்த அணியை எந்த வகையிலும் பாதிக்காது. மாறாக பஞ்சாப் அணிக்கு இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அந்த அணி 11 ஆட்டத்தில் 5 வெற்றி, 6 தோல்விகளை பெற்றுள்ளது. அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் எஞ்சிய ஆட்டங்களில் அதிரடி வெற்றிகளை குவித்தாக வேண்டும். இந்த சீசனில் வெளியூர் மைதானங்களில் பஞ்சாப் அணி சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்துள்ளது. மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட வலுவான அணிகளை அதன் மண்ணிலேயே வீழ்த்தியுள்ளது. இதனால் அந்த அணி இன்றும் வெற்றி பெறகூடும். கில்கிறிஸ்ட் காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதால் இன்று களமிறங்க வாய்ப்புள்ளது. அவர் களமிறங்கும் பட்சத்தில் ஹாரிஸ் நீக்கப்படுவார்.