இங்கிலாந்து ஆய்வில் தகவல் இரவில் அடிக்கடி உச்சாவா கொனக்சின் 43 தான் காரணம்
பாரிஸ் :இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் பாதிப்புக்கு காரணம் கொனக்சின் 43 என்ற புரதம்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வயதானவர்கள் இரவில் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்று அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு. இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை இருந்தால், தூக்கம் தொடர்ச்சியாக இருக்காது. இதுகுறித்து பல நாடுகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. Ôஅடிக்கடி சிறுநீர் கழித்தலும், அதற்கு தீர்வும்Õ என்ற அடிப்படையில் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதன் முடிவில் கொனக்சின் 43 என்ற ஒருவகை புரதம்தான் இதற்கு காரணம் என்று கண்டுபிடித்துள்ளனர். கொனக்சின் புரத பாதிப்பு ஏற்படும் போது சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தூண்டப்படுகிறது. சிறுநீர்ப்பை முழுமையாக இருந்தால் மட்டுமே இந்த உணர்வு ஏற்படும். ஆனால், கொனக்சின் 43 புரத பாதிப்பு, சிறுநீர் பை நிரம்பாமலேயே இத்தகைய உணர்வை ஏற்படுத்தும். இரவில் அடிக்கடி ஏற்படும் இத்தகைய உணர்வால் தூக்கம் பாதிக்கப்படும். இந்த புரதம் மூளைக்கு அனுப்பும் கட்டளைகளே உணர்வுகளாக வெளிப்படும். கொனக்சின் 43 சிர்காடியன் க்ளாக்கில் புரதம் எனப்படுகிறது. உரிய மருத்துவ சிகிச்சைகள் மூலம் இந்த பாதிப்பை எளிதில் சரி செய்ய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.