ஜப்பானில் இருந்து ஒரு ஆண்டு முன்பு சுனாமி இழுத்து சென்ற பைக் கனடாவில் கரை ஒதுங்கியது
ஒட்டாவா :ஜப்பானில் கடந்த ஆண்டு மார்ச் 11,ம் தேதி ஏற்பட்ட சுனாமியில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாயினர். சுனாமியில் அடித்துச்செல்லப்பட்ட மிசாகி என்ற 16 வயது விளையாட்டு வீரரின் புட்பால் அமெரிக்காவின் அலாஸ்கா கடற்கரையில் சமீபத்தில் கரை ஒதுங்கியது. இந்நிலையில், சுனாமியில் அடித்து செல்லப்பட்ட ஹர்லே டேவிட்சன் பைக், பசிபிக் பெருங்கடலில் ஒரு ஆண்டுக்கும் மேலாக பயணித்து சுமார் 6,400 கி.மீ. தூரம் தொலைவில் கனடா அருகே உள்ள கிரஹாம் தீவில் தற்போது கரை ஒதுங்கியுள்ளது.
கனடாவை சேர்ந்த பீட்டர் மார்க் என்பவர் கனடாவை ஒட்டிய கிரஹாம் தீவில் ஒரு ஆராய்ச்சிக்காக சென்றபோது ஒரு வாரம் முன்பு இந்த பைக்கை கண்டுபிடித்தார். ‘ஒரு கன்டெய் னரில் பைக் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. கிரஹாம் தீவை நெருங்கியபோது, கன்டெய்னர் கதவு திறந்து, பைக் வெளியேறியுள்ளது. கன்டெய்னரில் இருந்த தால்தான் பைக் மிதந்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறது. இல்லா விட்டால் உடனே மூழ்கியிருக்கும்’ என்று பீட்டர் கூறினார். அது ஜப்பான் பதிவெண் கொண்டது என்பது தெரியவந்தது. தீவிர முயற்சி எடுத்த பீட்டர், அது ஜப்பானை சேர்ந்த இகுவோ யோகோயமா என்பவருக்கு சொந்தமானது என்பதையும் கண்டுபிடித்தார். சுனாமியில் இகுவோ தன் குடும்பத்தினர் 3 பேரை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.