கோவை: கோவையில் ஆயுதப்படை பெண் போலீஸ் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண் டார். அவரது காதலனை பிடிக்க போலீசார் தர்மபுரியில் முகாமிட்டுள்ளனர்.கோவை திருச்சி ரோடு எல்பிஜி அடுத்த பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் கணேசன். மகள் சத்யா(22). கோவைப்புதூர் 4வது பட்டாலியன் பெண் போலீஸ். பட்டாலியனில் மற்ற பெண் போலீசாருடன் அறையில் தங்கியிருந்தார். நேற்று காலை வழக்கம் போல் பயிற்சிக்கு சென்று விட்டு மதியம் அறைக்கு திரும்பினார். மாலை 4.30க்கு மீண்டும் பயிற்சிக்கு செல்ல மற்ற அறையில் தங்கியிருந்த சக பெண் போலீசார் சென்று அறையை தட்டினர். அறைக்கதவு திறக்கப்படவில்லை. ஜன்னலை திறந்து பார்த்தபோது சத்யா மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.
குனியமுத்தூர் போலீ சார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பெயின்டர் ரஞ்சித்(28) என்பவரை காதலித்து வந்ததும், திருமணத்துக்கு காதலனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், மனமுடைந்த சத்யா தற்கொலை செய்துகொண்டதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ரஞ்சித்தை பிடித்து விசாரிக்க போலீசார் தர்மபுரி சென்றுள்ளனர்.அம்மா பிரிந்து சென்று விட்டதால் அப்பா கணேசனின் பராமரிப்பிலேயே சத்யா இருந்து வந்தார். அவரது மூத்த சகோதரி புவனேஸ்வரி காது கேளாதவர். தந்தையின் வருமானம் போதாது. மூத்த சகோதரியும் காது கேளாதவர் என்பதால் பள்ளி படிப்பு முடிந்தவுடன் வேலைக்கு சேர திட்டமிட்டார். 2009ல் போலீஸ் பணிக்கு தேர்வானார். அதன் பிறகு அவர்தான் குடும்பத்தை கவனித்து வந்தார். தற்போது சத்யா இறந்ததால் குடும்பத்தினர் நிர்கதியாக உள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook