உலக தண்ணீர் தினம் விழிப்புணர்வு பேரணி
திருவள்ளூர் : உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட பொதுப்பணித்துறை சார்பில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. கொசஸ்தலை ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர்கள் ராஜன், அரசு, சேது முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் விசாகன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி நேதாஜி சாலை, டிவி நாயுடு சாலை, ஜெ.என். ரோடு வழியாக ரயில் நிலையம் சென்றடைந்தது.காசு கொடுத்து நீர் வாங்கும் நிலையை தவிர்க்க மழை நீரை சேமிக்க வேண்டும். நீலத்தடி நீர் மாசுபடாமல் இருக்க நீர் நிலைகளில் குப்பை கொட்டுவதையும், கழிவுநீரை விடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பேரணியில் சென்றவர்கள் கையில் ஏந்திச் சென்றனர்.