புல்லட் சாகச வீரர் கதை படமாகிறது
‘காதல் பதிவுÕ பட இயக்குனர் இரா.பிரபு கூறியதாவது: கல்லூரி காதல் கதையை நகைச்சுவையாக கொண்டு ஸ்கிரிப்ட் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் புல்லட் வீரர் ஒருவரின் கதையும் இதில் இடம்பெறுகிறது. இதற்காக புல்லட்டில் சாகசம் செய்யும் காட்சிகளில் புதுமுகம் சுப்பிரமணி என்பவர் நடித்திருக்கிறார். புல்லட் மீது நின்றபடி தோப்பு கரணம்போடுவது, கரகம் ஆடுவது, சிலம்பாட்டம் ஆடுவது போன்ற காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. ஜோயல் ஹீரோ. ஜெய்ஷ்மா, ஸ்ரீநிலா ஹீரோயின்கள். மற்றும் கபிலன், மேடை நாடகங்களில் நடிக்கும் ஸ்ரீலட்சுமி உள்ளிட்டேர் நடித்துள்ளனர். குட்லக் ரவி இசை. பகவதிபாலா, இளந்திருமாறன் ஒளிப்பதிவு. அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.