| |||||
|
2012
29
Feb ![]() கல்வியில் நாடு தன்னிறைவை அடைய கிராமங்கள் தோறும் நூலகம் திறப்பது அவசியம் என மத்திய அரசு வலியுறுத்துகிறது. பல்வேறு மாநிலங்கள் இத்திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன. நூலகர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இளநிலை படிப்பை படித்து விட்டு வேறு ஏதாவது தொழில்கல்வி படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று யோசிப்பவர்களுக்கு நூலகம் மற்றும் அறிவியல் படிப்பு சற்று மாறுபட்டதாகவே இருக்கும். எம்எல்ஐஎஸ்சி எனப்படும் நூலகவியல் படிப்பை முடித்தால் நூலகராக பணியாற்றலாம். ஏற்கனவே பல பல்கலைக்கழகங்கள் நேரடியாகவும், தொலைநெறியிலும் நூலகம் சார்ந்த இளநிலை, முதுகலை மற்றும் சான்றிதழ் படிப்புகளை அளித்து வருகின்றன. குறிப்பாக தொலைநெறியில் படிப்புகளை தேர்வு செய்பவர்கள் நூலக படிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இப்படிப்பை முடித்தவர்கள் வேலைவாய்ப்பை பற்றி கவலை கொள்ள தேவையில்லை. அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகள், அரசு நூலகங்களில் வேலைவாய்ப்புகளை பெறலாம்.
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
R.Chandrasekar - Veeravanallur
8/30/2012 -- 15:31:45 Nulagam thirapathu mattum kalvi mattrum olukathai tharathu nulagathai panyanpattutha valli kanavendum
|
|