பத்மநாபசுவாமி கோயில் சி அறை இன்று திறப்பு
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறைகளில் உள்ள பொக்கிஷங்கள் கணக்கிடும் பணி கடந்த 20-ம் தேதி தொடங்கியது. மதிப்பீட்டு குழு தலைவர் வேலாயுதன் நாயர் தலைமையில் இப்பணிகள் நடந்து வருகிறது. முதலில் ‘ சி’ ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்களை கணக்கெடுக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், இந்த அறையை திருவனந்தபுரம் மாவட்ட சார்பு நீதிமன்றம் பூட்டி சீல் வைத்து இருந்ததால் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த ‘ இ,’ ‘எப்’ அறைகள் முதலில் திறக்கப்பட்டன. இந்நிலையில் ‘ சி’ ரகசிய அறையை திறக்க கோரி மதிப்பீட்டு குழுவினர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ‘சி’ அறையை திறக்க கடந்த வாரம் அனுமதி அளித்தது. இதையடுத்து இந்த அறை இன்று திறக்கப்பட்டது. அதில் இருக்கும் பொக்கிஷங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.