|
|||||
|
இந்தியாதென் ஆப்ரிக்கா 2020ல் நாளை மோதல்
கருத்துகளை தெரிவிக்க
டர்பன்: இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடந்த 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் 11 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 2020 ஆட்டம் ஒன்றில் மோது கிறது. இந்த ஆட்டம் நாளை இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு டர் பனில் நடைபெறுகிறது. இந்த ஆட்டம் சச்சின், தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் நித்தினி ஆகியோரை கவுரவிக்கும் வகையில் நடத்தப்படுகிறது. சச்சினின் 20 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை பாராட்டும் வகையிலும் சீனியர் வீரரான நித்தினிக்கு ‘விடை‘ கொடுக்கும் வகையிலும் போட்டியின் போது சிறிய பாராட்டு விழாவும் நடத்தப்பட உள்ளது. சச்சின் இதுவரை சர்வதேச அளவில் ஒரு 2020 ஆட்டத்தில் மட்டுமே ஆடியுள்ளார். இளம் தலைமுறையினருக் கான ஆட்டம் என அவர் இதில் இருந்து விலகியே இருந்தார். நாளைய ஆட் டம் அவரை கவுரவிக்கும் வகையில் நடத்தப்படுவதால் அவர் நிச்சயம் ஆடுவார் என கூறப்படுகிறது. போட்டியை டென் கிரிக்கெட் நேரடி ஒலிபரப்பு செய்கிறது. மேலும் சில
|
|