|
|||||
|
கல்லூரியில் ராகிங் 2 மாணவர்கள் கைது
கருத்துகளை தெரிவிக்க கோவை: திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்கள் அஸ்வத் அசோக், பிலால் முகமது. இருவரும், குனியமுத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி ஏரோநாட்டிக்ஸ் முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர். ‘சீனியர் மாணவர்கள் 7 பேர், ஒரு அறையில் அடைத்து வலுக்கட்டாயமாக மது, போதை மாத்திரைகளை வாயில் ஊற்றி சித்ரவதை செய்தனர். 150 கொசுக்களை உயிருடன் பிடித்து தரும்படியும், கூறி ராகிங் செய்தனர்’ என்று இவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்தனர். இதற்கிடையே கல்லூரி நிர்வாகம், ராகிங் செய்த மாணவர்கள் மீரஜ்(18), செரீன்ராஜ்(20) ஆகியோரை கல்லூரியில் இருந்து டிஸ்மிஸ் செய்துள்ளது. இவர்களை நேற்று போலீசார் கைது செய்து, கோவை சிறையில் அடைத்தனர். மேலும் சில
|
|