சச்சின் அவுட்டால் வில்லனாகி விட்டேன் : சொல்கிறார் ராம்பால்
மும்பை டெஸ்ட் போட்டியில் சச்சினை சதம் அடிக்கவிடாமல் 94 ரன்களில் ராம்பால் அவுட்டாக்கினார். இதனால் 100வது சதம் சச்சின் விளாசுவார் என்ற நினைப்பில் இருந்த ரசிகர்களின் மனது சுக்குநூறானது. சச்சினை ஆட்டமிழக்க செய்தது குறித்து ராம்பால் கூறுகையில், சச்சினை திட்டமிட்டு ஆட்டமிழக்க செய்தோம். போட்டி தொடங்குவதற்கு முன்பே பயிற்சியாளருடன் சச்சினுக்கு எந்தவிதமான பந்துவீச வேண்டுமென ஆலோசனை நடத்தினோம். அதன்படியே ஆப் திசையில் பவுன்சராக வீசி அவரை வீழ்த்தினோம். அவரை அவுட்டாக்கியதும் பவுண்டரி எல்லைக்கு பீல்டிங் செய்ய சென்ற போது ரசிகர்கள் என்னை திட்டினர். அப்போது நான் என்னை வில்லன் போன்று உணர்ந்தேன் என்றார்.