புதுடெல்லி : சிங்கிள் பிராண்ட் ஷோரூம் என்றால் 100 சதவீதம், மல்டி பிராண்ட் சூப்பர் மார்க்கெட் என்றால் 51 சதவீத அளவு அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. திமுக, திரிணாமுல் கட்சிகள் எதிர்ப்புக்கு இடையே மத்திய அரசு இந்த முடிவை எடுத்தது. இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், மத்திய அமைச்சர் சரத் பவார் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அன்னிய முதலீடுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மைய பகுதியில் முற்றுகையிட்டனர். அவர்களுடன் சேர்ந்து கம்யூனிஸ்ட், பாரதிய ஜனதா உறுப்பினர்களும் அமைச்சரவையின் முடிவை திரும்ப வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதற்கிடையில், கேரளாவை சேர்ந்த உறுப்பினர்கள், டேம் 999 படத்துக்கு தமிழக அரசின் தடையை எதிர்த்து கூச்சல் போட்டனர். தெலங்கானா பிரச்னையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் போட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து அவையை திங்கட்கிழமை வரை சபாநாயகர் மீரா குமார் ஒத்தி வைத்தார். மாநிலங்களவையிலும் கூச்சல் நிலவியதால், திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook