|
|||||
|
போலி ஆவணம் மூலம் கடன் வழங்கிய வங்கி மேலாளர்கள் சிறையில் அடைப்பு
கருத்துகளை தெரிவிக்க மதுரை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பாளையங்கோட்டை கிளையில் கடந்த 2007 முதல் 2010 வரை முதன்மை மேலாளராக பணியாற்றியவர் பாலசுப்பிரமணியன்(55). இவர் தற்போது ஈரோடு மண்டல அலுவலகத்தில் முதன்மை மேலாளராக பணியாற்றி வருகிறார். பாளையங்கோட்டையில் பணியாற்றிய போது போலி ஆவணங்கள் மூலம் கடன் வழங்கி வங்கிக்கு ரூ.2 கோடியே 42 லட்சத்து 37 ஆயிரம் இழப்பு ஏற்படுத்தியதாக, முதன்மை மேலாளர் பாலசுப்பிரமணியன், அதிமுக முன்னாள் அமைச்சர் அம்மமுத்து பிள்ளை, கல்யாணசுந்தரம், மகாலிங்கம், அன்ன சரஸ்வதி, மோகன்ராஜ், கீதா, பார்வதி ஆகியோர் மீது சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நேற்று பாலசுப்பிரமணியனை சிபிஐ போலீசார் கைது செய்து மதுரை சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் ஜன.21 வரை காவலில் வைக்க நீதிபதி ஜெகந்நாதன் உத்தரவிட்டார். மேலும் சில
|
|