டெல்லி போலீசில் காலியாக உள்ள 2622 கான்ஸ் டபிள் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. 1.கான்ஸ்டபிள் (எக்சிக்யூட் டிவ்) (ஆண்கள்): 2622 (பொது- 1311, ஓபிசி-708, எஸ்சி-402, எஸ்டி-201). வயது: 1.7.2011ன்படி 18 லிருந்து 21க்குள். கல்வித்தகுதி: பிளஸ் 2 வில் தேர்ச்சி. உடல் தகுதி: உயரம் 170 செ.மீ., மார்பளவு சாதாரண நிலையில் 81 செ.மீ., யும், விரிவடைந்த நிலையில் 85 செ.மீ.,யும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் அனை வரும் விண்ணப்பிக்கும் தேதிக்கு முன் லகுரக மோட்டார் டிரைவிங் லைசென்ஸ் பெற்றி ருக்க வேண்டும். ஆன்லைன் மற்றும் சாதா ரண தபால் மூலம் விண்ணப் பிக்கலாம். விண்ணப்ப கட்டணம்: ரூ.100ஐ DCP/Recruitment Cell, New P olice Lines, Delhi என்ற பெயரில் டெல்லியில் மாற்றத் தக்க வகையில் டிடி அல்லது பேங்கர்ஸ் செக்காக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி., எஸ்டி., முன்னாள் ராணுவ வீரர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.delhipolice.nic.in, www.delhipolice recruitment.nic.in ஆகிய இணையதள முகவரி களையோ அல்லது அக்.29- நவ.4 தேதியிட்ட எமப்ளாய் மென்ட் நியூசையோ பார்க்கவும். சாதாரண தபாலில் விண்ணப்பிப்பவர்கள் அனுப்ப வேண்டிய முகவரி: Post Box.No:8020, Delhi 110033. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.25.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook