பெயரிலே கவர்ச்சி லேகா பூரிப்பு !
லேகா வாஷிங்டன் கூறியது:‘ஜெயம் கொண்டான், ‘வா படங்களில் நடித்தேன். வானம் படத்தை தொடர்ந்து இயக்குனர் கிரிஷ் இயக்கும் தெலுங்கு படத்தில் நடிக்கிறேன். இது இந்தி ரீமேக். இதன் ஷூட்டிங் தொடங்கிவிட்டது, ஜனவரி அல்லது பிப்ரவரியில் ரிலீஸ் ஆகிறது. இதற்கு மேல் இப்படம் பற்றி எதுவும் சொல்லக்கூடாது என்று இயக்குனர் கூறி இருக்கிறார். இந்தியில் ‘பவர்Õ படத்தில் அமிதாப்புடன் நடிக்கிறேன். முதல் ஷெட்யூலே அவருடன்தான் நடந்தது. அக்காட்சியில் அமிதாப்பை விட எனக்குத்தான் வசனம் அதிகம். மனதுக்குள் ஒரு பயம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அக்காட்சியில் நடித்து முடித்தேன். அமிதாப் பாராட்டினார். இதை வாழ்நாளில் மறக்கவே முடியாது. அதில் டாக்டராக நடிக்கிறேன்.
‘பெயரை மாற்றிக் கொள்ளப்போகிறீர்களா?Õ என்று சிலர் கேட்கின்றனர். என் பெயர் கவர்ச்சியாக அமைந்துள்ளது. அதை எதற்கு மாற்ற வேண்டும். ஒருமுறை என் பெயரை கேட்டால் அதை யாரும் மறப்பதில்லை.