பொருளாதார தாராளமய உலகத்தில் பயிற்சி பெற்ற நிதி பகுப்பாய்வு வல்லுனர்களுக்கான தேவை அதிகளவில் உள்ளது. இதற்கான படிப்பிற்கு (CFA) உலகம் முழுவதும் அதிக மதிப்பும், மரியாதையும் உள்ளது. இந்த படிப்பை முடித்த வங்கி பணியாளர்களுக்கு, இத்துறைக்கான பல்வேறு தேர்வுகளில், சில பாடங்களை எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதே சமயம், புதிதாக சிதிகி முடித்து வருபவர்கள், நிதித் துறையில் பயிற்சி எக்சிகியூடிவ் பணியில் முதல் வாய்ப்பை பெறுகிறார்கள். இத்துறையில் ஓரளவு அனுபவம் கிடைத்த பிறகு, உயர்நிலை எக்சிகியூடிவ் பணி வாய்ப்புகளை பெறலாம்.
இப்படிப்பில் சேர அங்கீகாரம் பெற்ற பல்கலையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதேவேளையில், எம்.பி.ஏ, சி.ஏ., சி.எஸ்., சி.டபிள்யூ.ஏ. மற்றும் மேலாண்மை படிப்பில் முதுநிலை டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் இப்படிப்புக்கான நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள். அதேசமயம், அமெரிக்காவிலுள்ள சிதிகி கல்வி நிறுவன தேர்வை எழுத, அதுதொடர்பான பணிகளில் 4 வருட அனுபவம் இருக்க வேண்டும். ஐ.சி.எப்.ஏ.ஐ. இரட்டை பட்டப்படிப்பில் சேர, ஒரு இளநிலைப் பட்டம் அவசியம். மேலும், சி.ஏ, சி.எஸ்., சி.டபிள்யூ.ஏ, மற்றும் நிதித்துறையில் எம்.பி.ஏ. படித்தவர்களுக்கு, விரைவுப்படுத்தலுக்கான ஒரு வருட படிப்பு வழங்கப்படுகிறது.
தனிப்பட்ட பண்புகளாக அக்கவுன்டன்சி பின்புலம் இருக்க வேண்டும். உள்ளுணர்வு திறன் இருக்க வேண்டும். நடப்பு நிகழ்வுகளின் மீது ஆர்வமும், கணக்கியல் திறனும் இருக்க வேண்டும். பொதுஅறிவில் முதிர்ச்சியும், நிதி விவகாரங்களை விரும்புபவராகவும் இருக்க வேண்டும். கடினமாக உழைக்கும் மனப்பான்மை இருக்க வேண்டும். சிறந்த பகுப்பாய்வு திறனைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் நிதி முதலீட்டில் ஆர்வம் இருக்க வேண்டும். புதிதாக சிதிகி முடித்தவர்கள் தோராயமாக வருடத்திற்கு ரூ.4 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார்கள். அனுபவம் உள்ளவர்கள் இதைவிட அதிகம் பெறுகிறார்கள்.
வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங் கள், நிதி நிறுவனங்கள், ரயில்வே மற்றும் ஸிஙிமி நிதி நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன. பொதுவாகவே, இத்துறையில் பணிபுரிபவர், சிறந்த ஊதியம் பெறுகிறார். CFA படிப்பை Shaheed Sukhdev College of Business studies New Delhi, ICFAI University Dehradun, ICFAI University Gangtok, Sikkim உள்ளிட்ட சில முக்கிய கல்வி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook