மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்எல்சி) இந்தியா முழுவதும் உள்ள கிளைகளை விரிவுபடுத்தும் நோக்கில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 150 இடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. மொத்த காலியிடங்கள்: 150. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ருமென்டேஷன், இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், சுரங்க வேலை, சுரங்க ஆய்வு, ரசாயனம், ஜியாலஜி, சயின்டிபிக், நிதி, மனிதவளம், மருத்துவம், கம்பெனி செக்ரட்டேரியல், அலுவலக மொழி (இந்தி) ஆகிய பல்வேறு பிரிவுகளில் 150 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிகள் அனைத்தும் இ&2, இ&3, இ&4, இ&5, இ&5ஏ, இ&6, இ&7 ஆகிய கிரேடுகளின் கீழ் நிரப்பப்படுகின்றன. மேலும் முதன்மை பொது மேலாளர் (கிரேடு இ&8ஏ) பொது மேலாளர் (கிரேடு இ&8) பதவிகளுக்கு 12 காலியிடங்கள் உள்ளன. வயது: 21 முதல் 23க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி, வயது, தேர்வு முறை, விண்ணப்ப கட்டணம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.nlcindia.com என்ற இணையதளத்தையோ, அக்.22&28 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழையோ பார்க்கவும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.14.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook