திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு கழகத்திற்கு சொந்தமான திரவ எரிவாயு மையத்தில் சயின்டிஸ்ட்/இன்ஜினியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 1. சயின்டிஸ்ட்/இன்ஜினியர்: 2 இடங்கள், தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் முதல் வகுப்பு பிஇ/பிடெக் படிப்புடன் இண்டஸ்ட்ரியல் சேப்டி பாடத்தில் முதல் வகுப்பு எம்இ/எம்டெக் பட்டம். 2. சயின்டிஸ்ட்/இன்ஜினியர் (போஸ்ட் கோட்:589): 2 இடங்கள். தகுதி: கெமிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் முதல் வகுப்பு பிஇ/பிடெக் படிப்புடன் இண்டஸ்ட்ரியல் சேப்டி பாடத்தில் முதல் வகுப்பு எம்இ /எம்டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3. இன்ஜினியர் (போஸ்ட் கோட்:590): மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் முதல் வகுப்பு பிஇ/பிடெக் படிப்புடன் டர்போ மெஷினரி பாடத்தில் முதல் வகுப்பு எம்இ/எம்டெக் பட்டம். 4. இன்ஜினியர் (போஸ்ட் கோட்:591): தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் முதல் வகுப்பு பிஇ/பிடெக் படிப்புடன் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் பாடத்தில் முதல் வகுப்பு எம்இ/எம்டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5. மெடிக்கல் ஆபீசர் (போஸ்ட் கோட்:592): தகுதி: எம்பிபிஎஸ் படிப்புடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.15,600&ரூ.39,100. வயது: 3.11.2011ன்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு. தகுதியான விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். மாதிரி விண்ணப்பம் மற்றும் விவரங் களுக்கு ஷ்ஷ்ஷ்.வீsக்ஷீஷீ.ஸீவீநீ.வீஸீ இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: The Senior Administrative Officer, Recruitment Section, Liquid Propulsion System Centre, Valiamala (PO), Thiruvananthapuram 695 547. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.3
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook