ஏரியில் வேன் கவிழ்ந்து 11 பெண்கள் படுகாயம்
வாணியம்பாடி : வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் உள்ள ஷூ கம்பெனிக்கு சொந்தமான வேன் இன்று காலை வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம், தெத்தூர், நிம்மியம்பட்டு உள்ளிட்ட பகுதியில் இருந்து 11 பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பேரணாம்பட்டு நோக்கி சென்றது. வேனை டிரைவர் பார்த்திபன் (25) ஓட்டினார். ஆலங்கயாம் அடுத்த நிம்மியம்பட்டு ஏரி அருகே வந்தபோது ஒரு வளைவில் திரும்பிய வேன் திடீரென நிலைதடுமாறி ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் மற்றும் 11 பெண்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.