கடல் அட்டை பிடித்த 4 மீனவர்கள் சிக்கினர்
மண்டபம் : ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 300க்கும் அதிகமான விசைப்படகுகள் கடலுக்குச் சென்றன. மீன்பிடிக்கும்போது எல்லை தாண்டும் மீனவர்களைக் கண்காணிக்கும் பணியில் இந்திய கடற்படை வீரர்கள் நேற்றிரவு ஈடுபட்டனர். இன்று அதிகாலை தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயில் பகுதியில் ரோந்து சென்றபோது ஒரு விசைப்படகை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 150 கிலோ கடல் அட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. படகில் இருந்த நயினா முகமது(36), அவரது மகன் நசீப்(15), தன்வீர் அகமது(18), முகமது (20) ஆகிய 4 பேரையும் கைது செய்து 150 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.