சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. டெக்னிக்கல் கிரேடு: நிலை-3:- 10 இடங்கள். விளையாட்டு பிரிவு வாரியாக காலியிடங்கள் விவரம்: 1.Volleyball (Attacker/Blocker/Setter) 2 2. Crickeˆ (Bowler/Baˆvman/Allroànder)2 3. FootBall (Forward/Midfield/Defender)1 4. Kabaddi (Attacker/Allrounder)2 5. Powerlifting (66kg/74kg/83kg)2 6. Hockey (Forward)1 கல்வித்தகுதி: ஏதாவதொரு தொழிற் பிரிவில் ஐடிஐ படிப்புடன், விண்ணப்பிக்க விரும்பும் விளையாட்டில் சம்பந்தப்பட்ட பிரிவில் தேசிய/மாநில/பல்கலைக்கழக அளவில் பங்கேற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3வது இடத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.5,200- ரூ.20,200. வயது: 1.1.2012ன்படி 18 லிருந்து 25க்குள். கடந்த 2 ஆண்டுகளில் விளை யாட்டுத்துறையில் விண்ணப்பதாரரின் சாதனைகளின் அடிப்படையில் தகுதியான வர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு, உடற்தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் பணி நியமனம் உறுதி செய்யப்படும். விண்ணப்ப கட்டணம்: ரூ.40/-ä Avvivˆanˆ Pervonnel Officer/ICF என்ற பெயரில் மாற்றத்தக்க வகையில் கிராஸ் செய்யப்பட்ட போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டும். எஸ்சி,எஸ்டி மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது. மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு அக்டோபர் 8-14 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூசைப் பார்க்கவும். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: ASSISTANT PERSONNEL OFFICER/G,INTEGRAL COACH FACTORY, CHENNAI600 038. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.31.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook