பெண் இயக்குனர் மீது திவ்யா தாக்கு
‘வாரணம் ஆயிரம்Õ திவ்யாவுக்கும், கன்னட பட தயாரிப்பாளருக்கும் சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கன்னட படங்களில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்தார் திவ்யா. பின்னர் அந்த முடிவை மாற்றிக்கொண்டார். இந்த பரபரப்பு அடங்கியதும் அடுத்த பரபரப்பு தொடங்கிவிட்டது. பெண் இயக்குனர் கவிதா லங்கேஷ் இயக்கும் ‘கிரேஸி லோகாÕ என்ற படத்தில் திவ்யா குத்து பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடுகிறார் என்று இயக்குனர் சொல்ல, அது திவ்யாவை மூட் அவுட் ஆக்கியது.
இது பற்றி திவ்யா கூறியது: நான் குத்து பாடலுக்கு ஆடுகிறேன் என்று தேவையில்லாத வதந்தியை பரப்புவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே Ôவன யுத்தம்Õ படத்திலும் குத்து பாடலுக்கு ஆடப்போவதாக வதந்தி வந்தது. இப்போது இந்த படத்தில் வந்திருக்கிறது. நான் ஆடுவதுபற்றி என்னிடம் யாரும் கேட்கவில்லை. நானும் ஒப்புக்கொள்ளவில்லை. இது பற்றி இயக்குனர் கவிதாவிடம் கேட்டபோது தயாரிப்பாளர்தான் தன்னிடம் இந்த தகவலை கூறியதாக சொல்கிறார். இதுவும் ஒருவகையில் பப்ளிசிட்டி என்கிறார்கள். இப்படியொரு பப்ளிசிட்டி எனக்கு தேவை இல்லை.