விஞ்ஞான ரீதியில் உலகம் எந்த அளவு அசுர வளர்ச்சியை பெறு கிறதோ, அதே வேகத்தில் மக்களும் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் தோன்றிவரும் புதிய நோய்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருந்துகளின் தேவைகளும் அதிகரித்து வருகின்றன. மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது ஆராய்ச்சியை விரிவுபடுத்தி வருகின்றன. சில ஆண்டு களுக்கு முன்பு சொற்ப அளவில் இருந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இன்று போட்டி போட்டுக்கொண்டு பல்கிப்பெருகிவிட்டன. மருந்து நிறுவனங்களுக்கு பல்வேறு வகைகளிலும் இந்திய அரசு உதவுவதால் வெளிநாட்டு நிறுவனங்கள் கூட இங்கு கால் பதிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
இதுபோன்ற நிறுவனங்கள் வெளி யிடும் மருந்துகள் தரமானவைதானா? நோய் தீர்க்கும் மூலக்கூறுகளை கொண்டுள்ளதா? சரியான அளவில் கூட்டுப் பொருட்கள் அடங்கியுள்ளனவா? பக்க விளைவுகள் உள்ளதா? குழந்தைகள், பெரியவர்களுக்கு பாதுகாப்பானதா? என்பதையெல்லாம் ஆராய்ந்து சரியான மருந்துகளை மக்களிடத்தில் சேர்க்கும் பொறுப்பு மருந்து ஆய்வாளர்கள் என்ற பணியிடத்திற்கு உண்டு. இந்த பணி யிடங்களில் ஆட்கள் தேவை உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கிறது.
மருந்து ஆராய்ச்சியாளர் பணிக்கு சிறந்த பகுப்பாய்வு திறன், தலைமைத்துவப் பண்பு, சோதனைகளை கண்காணிப்பதற்கான மேலாண்மைத் திறன் மற்றும் சிறந்த வியாபாரத்திறன் அடிப் படை தகுதியாக அமைய வேண்ளடும். பள்ளி மேல்நிலைப் படிப்பில், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் போன்ற படிப்புகளை படித்திருக்க வேண்டும். எம்.பி.பி.எஸ். படிப்பிலோ, பாராமெடிக்கல் அல்லது லைப் சயின்ஸ் பிரிவுகளில் பி.எஸ்சி படிப்பிலோ சேர்ந்து இந்த துறையில் நுழையலாம். படிப்பை முடித்து, இதுதொடர்பான பயிற்சிகள் எடுத்து, சிறந்த ஆய்வாளர் ஆகலாம்.
ஊதியத்தை பொறுத்தவரை ஆரம்ப நிலையில் ஒருவர் வருடத்திற்கு ரூ.3 லட்சம் வரை பெறுகின்றனர். படிப்படி யாக ஊதியம் அதிகரித்து ரூ.7 லட்சத்தில் இருந்து அனுபவ நிலையில் வருடத்திற்கு ரூ.15 லட்சம் வரை கூட ஊதியம் பெறுகின் றனர். இத்துறை சார்ந்த படிப்பை மேற் கொள்ள இந்தியாவிலேயே புகழ்பெற்ற நிறுவனமாக, ஐ.சி.ஆர்.ஐ (Institute of Clinical Research of India) திகழ்கிறது. இதன் பிற வளாகங்கள் பெங்களூர், டேராடூன், அகமதாபாத், ஐதராபாத் மற்றும் மும்பை போன்ற இடங்களில் உள்ளன.
இந்த நிறுவனத்தில் மேம்படுத்தப்பட்ட கிளினிக்கல் ரிசர்ச்சில் முழுநேர முதுநிலை டிப்ளமோ, முழுநேர எம்.எஸ்சி, கிளினிக்கல் ரிசர்ச் மேலாண்மையில் முழுநேர எம்எஸ்சி, கிளிக்கல் தரவு மேலாண்மையில் பகுதிநேர முதுநிலை டிப்ளமோ, கிளினிக்கல் ரிசர்ச்சில் பகுதிநேர முதுநிலை டிப்ளமோ, கிளினிக்கல் சோதனை மேலாண்மையில் பகுதிநேர முதுநிலை டிப்ளமோ, பார்மகோவிஜிலன்சில் பகுதி நேர முதுநிலை டிப்ளமோ, செவிலியர்களுக்கான கிளினிக்கல் ரிசர்ச்சில் பகுதிநேர முதுநிலை சான்றிதழ், பகுதிநேர சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இவைதவிர இன்னும் சில படிப்புகளும் உள்ளன. அதைப்பற்றிய விவரங் கள் மற்றும் அவற்றில் சேர்வதற்கான தகுதிகளை ஐ.சி.ஆர்.ஐ. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.icriindia.com) தெரிந்து கொள்ளலாம். கிளினிக்கல் ரிசர்ச் படிப்புகளை ஏ.சி.இ-மும்பை, பார்ம சூடிகல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கல்வி நிறுவனம்-ஐதராபாத், மும்பை பார்மசி கல்லூரி-மும்பை உள் ளிட்ட கல்வி நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook