பழகுறதுல இந்தியர்கள் ரொம்ப மோசமாம்!
வெலிங்டன்: ‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு’ என்ற நிறுவனம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் செயல்படுகிறது. உலகின் பல நாடுகளிலும் கிளைகள் உள்ளன. மற்றவர்களுடன் எந்த நாட்டினர் சகஜமாக பழகுகின்றனர் என்று சர்வே எடுத்தது. இதில் முதல் இடத்தில் இருப்பது நியூசிலாந்து. ‘‘திடீரென ஒரு கஷ்டம் என்றால் ஓடோடி வந்து உதவுவதற்கு ஏராளமான நண்பர்கள், உறவினர்கள் இருக்கிறார்கள்’’ என்று 97% மக்கள் கூறியிருக்கிறார்கள்.
போர்ச்சுகல், இஸ்ரேல், அயர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. கட்டக் கடைசியில் இருப்பது இந்தியா. உறவினர்கள், நண்பர்கள் இருப்பதாக 58 சதவீதத்தினர் கூறியுள்ளனர். ‘‘வாழ்க்கை முழு மகிழ்ச்சி, திருப்தி’’ என்று கூறியிருப்பதிலும் நியூசிலாந்துதான் முதலிடம். டென்மார்க், கனடா, நார்வே, சுவிட்சர்லாந்து.. என்று பட்டியல் நீள்கிறது. கீழிருந்து 2-வது இடத்தில் இருக்கிறது இந்தியா.