சிறந்த பல்கலை பட்டியல் : இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெறவில்லை!
லண்டன்: உலகின் மிகச்சிறந்த 200 பல்கலைக்கழகங்களின் பட்டியலில், இந்தியாவை சேர்ந்த ஒரு பல்கலைக்கழகம் கூட இடம்பெறவில்லை. உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்து டைம்ஸ் உயர் கல்வி இதழ் பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் 200 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்தியாவை சேர்ந்த ஒரு பல்கலைக்கழகம் கூட பட்டியலில் இடம்பெறவில்லை. இந்தியாவின் மிகச்சிறந்த பல்கலைக்கழகம் என்று கருதப்படும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். போன்றவை இடம்பெறாதது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இந்த பட்டியலில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகம் காணப்படுகிறது. ÔÔஇந்திய, சீன மாணவர்கள் அமெரிக்கர்களுக்கு சவாலாக உள்ளனர். அவர்களுக்கு இணையாக தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்ÕÕ என்று அமெரிக்க மாணவர்களை அதிபர் ஒபாமா தொடர்ந்து எச்சரித்து வருகிறார். ஆனால், இந்த பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்த 75 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. சிறந்த முதல் 10 பல்கலைக்கழகங்களில் 7 அமெரிக்காவை சேர்ந்தவை. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், இம்பீரியல் ஆகியவை மற்ற 3 இடங்களை பிடித்துள்ளன.
பட்டியலில் இங்கிலாந்து (32), ஜெர்மனி (12), நெதர்லாந்து (12), கனடாவை சேர்ந்த 9 பல்கலைகள் இடம்பெற்றுள்ளன. தவிர தைவான், பிரேசில், சிங்கப்பூர், தென் ஆப்ரிக்கா, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த பல பல்கலைக்கழங்கள் இடம்பெற்றுள்ளன.