ஆஸி. பீச்சில் டூ பீஸ்... கின்னஸ்!
சிட்னி: ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் கடற்கரையில், ‘பிகினி எனப்படும் டூ பீஸ் நீச்சல் உடையில் நீளமான அணிவகுப்பு நடத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் 357 இளம்பெண்கள். ஐரோப்பாவின் கேமேன் தீவில், 332 இளம்பெண்கள் நீச்சல் உடையில் அணிவகுத்து சென்றதே இதுவரை சாதனையாக இருந்தது. இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
கின்னஸ் உலக சாதனை நடுவரான கிரிஸ் ஷீடி கூறுகையில், ‘இளம்பெண்கள் சரியான பிகினி உடை அணிந்திருக்கிறார்களா என்பதை சரிபார்க்கும் வேலை கடினமாக இருந்தது. இந்த அணிவகுப்பில் 361 பெண்கள் பங்கேற்றனர். ஆனால் அவர்களில் 4 பேர் சரியான பிகினி அணியவில்லை. எனவே அவர்கள் நிராகரிக்கப்பட்டனர். அப்படியிருந்த போதும், 357 பெண்கள் தேர்வானதால் பழைய சாதனை முறியடிக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுவிட்டனர் என்றார்.