இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் நடைபெற உள்ளது. முதல் ஆட்டம் 14-ம் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது. இந்நிலையில் இந்த தொடரில் டிஆர்எஸ் முறைக்கு பயன்படுத்தப்படும் ஹாட் ஸ்பாட் கேமிரா பயன்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்பிமோர்க்கல் விலகல்!
தென் ஆப்ரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் வருகிற 13, 14-ம் தேதிகளில் 20-20 ஆட்டங்களில் மோதுகிறது. இந்நிலையில் காயம் காரணமாக தென் ஆப்ரிக்க அணியின் ஆல்ரவுண்டர் அல்பிமோர்க்கல் இந்த ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மெக்லாரன் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரெஸ்ட் ஆப் இந்தியா சாம்பியன்!
இரானி கோப்பை போட்டியில் ராஜஸ்தான் - ரெஸ்ட் ஆப் இந்தியா மோதின. 618 ரன்கள் இலக்கை கொண்டு ஆடிய ராஜஸ்தான் 213 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் 404 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ரெஸ்ட் ஆப் இந்தியா கோப்பையை வென்றது.
ஆஸி.யில் கூடுதல் : பயிற்சி ஆட்டம்!
இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், இரண்டு 20-20 மற்றும் 3 நாடுகள் போட்டியில் விளையாடுகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் கூடுதல் பயிற்சி ஆட்டங்களை சேர்க்க வேண்டுமென பிசிசிஐ கோரிக்கை விடுத்தது. இதையடுத்து 2 பயிற்சி ஆட்டங்கள் நடத்தப்படும் என ஆஸி. தெரிவித்துள்ளது. முதல் ஆட்டம் டிசம்பர் 15-ம் தேதியும், 2வது ஆட்டம் 19-ம் தேதியும் கனேபராவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook