இந்திய விமானப்படையில் குரூப் ‘ஒய்’ பிரிவில் காலியாக உள்ள ஏர்மேன் பணியிடங்கள் தஞ்சாவூரில் நடைபெறும் ஆள்சேர்ப்பு முகாம் மூலம் நிரப்பப்பட உள்ளன. பணி: குரூப் ‘ஒய்’ (நான்- டெக்னிக் கல்) டிரேட்ஸ் (ஆட்டோ டெக்னாலஜி, ஜிடிஐ, ஐஏஎப் (பி) மற்றும் மியூசிஷியன் தவிர). வயது: 1.1.1991ம் ஆண்டு முதல் 31.3.1995ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். தகுதி: 10+2+3 கல்வி முறையில் 50 சதவீத தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பட்டம் அல்லது டிப்ளமோ. உடல்தகுதி: குறைந்தபட்சம் 152.5 செமீ உயரம் இருக்க வேண்டும். மார்பளவு விரிவடைந்த நிலையில் 5 செமீ அதிகரிக்க வேண்டும். உடல்திறன் தேர்வில் 1.6 கி.மீ தூரத்தை 8 நிமிடங்களில் ஓடிக் கடக்க வேண்டும். தஞ்சாவூரில் உள்ள விமானப்படை மையத்தில் தேர்வு நடைபெறும் நாட்கள்: எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு : அக்.18. நேர்முகத்தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை: அக்.19. ரிசர்வ் நாட்கள்: அக்.20 மற்றும் 21 நேர்முகத் தேர்வுக்கு செல்லும் போது எச்பி பென்சில், ரப்பர், ஷார்ப்னர், கறுப்பு அல்லது நீல நிற பால்பாயின்ட் பேனா, 7 பாஸ்போர்ட் அளவுள்ள கலர் போட்டோக்கள், ஸ்டாம்ப் ஒட்டாத சுயமுகவரியிட்ட 2 வெள்ளை நிற கவர்கள், கல்வித்தகுதி, மதிப்பெண், விளையாட்டு ஆகியவற்றின் ஒரிஜினல் சான்றிதழ்கள் மற்றும் அவற்றில் ஒவ்வொன்றிலும் தலா 3 நகல்கள். கூடுதல் தகவல்கள் மற்றும் விவரங்களுக்கு www.indianairforce.nic.iஸீ
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook