Untitled Document
2011
02
Oct
மரண மலைக்கரடு.. கொலைவெறி வவ்வால்கள்!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

மன்னர் கோட்டைகள், கோயில் சிற்பங்கள், கல்வெட்டுகள், நடுகற்கள், பழமையான ஓவியங்கள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள் மூலம் தமிழகத்தின் தொன்மையான வரலாற்றை  அறிந்து கொள்ள முடியும். அப்படி வரலாற்று சான்றுகளில் ஒன்றாய் இருக்கிறது கோட்டைக்கரடு.
மனிதனின் வாய் வழியாக உள்நுழைந்து காது வழியே வெளியேறி மீண்டும் தலை உருவம் கொண்ட கோட்டைக்குள் செல்வது போன்ற வித்தியாசமான அமைப்பு கொண்டது கோட்டைக்கரடு. சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ராசிபுரம் செல்லும் வழியில் 12 கி.மீ தூரத்தில் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி இருக்கிறது. அங்கிருந்து சிறிது தூரத்தில் நாழிக்கல்பட்டி என்ற குட்டி கிராமம். அதன் வழியே பயணித்தால் துர்க்கை அம்மன் கோயில், அடுத்து ஏரி, ராட்சத ஆலமரம், 200 ஆண்டு பழமையான குளம்.. இவற்றை கடந்தால் நம் கண் முன் நிற்பது கோட்டைக்கரடு மலை.
 12ம் நூற்றாண்டுக்கு முந்தைய வரலாற்றின் சுவடாய் இருக்கிறது. பொற்குவியல், பெருஞ்செல்வத்தை கொள்ளை கும்பலிடம் இருந்து பாதுகாக்க, மன்னர்கள் கோட்டைக்கரட்டில் தான் அவற்றை வைத்து காத்து வந்ததாக தகவல்கள் கூறுகின்றன. சேலம், சங்ககிரி, நாமக்கல், திண்டுக்கல் போன்ற பகுதிகளை ஆண்டவர்கள் காலத்திலும், வெள்ளையரை எதிர்த்து போரில் மடிந்த திப்பு சுல்தான் காலத்திலும் இந்த கோட்டை பயன்பாட்டில் இருந்துள்ளது.
இப்போது மலைக்கரடு உச்சிக்கு செல்ல சரியான பாதை இல்லை. மலையேறும்போது சற்று சறுக்கினாலும் மரண தேவன் பிடித்துக் கொள்வான். அடிவாரத்தில் இருந்து ஒவ்வொரு பாறையாக கால் வைத்து, கைகளில் பாறை கங்குகளை பிடித்தபடி மெதுவாக சென்றால் தான் மலையேற முடியும். குறைந்த பட்சம் இரண்டு, மூன்று பேராக செல்வதே பாதுகாப்பானது. பாதி அளவு வரை சாய்வாகவும், சமதளமாகவும் உள்ளது. பாதிக்கு மேல் நிமிர்ந்து நின்று மிரள வைக்கிறது
 குறிப்பிட்ட தூரம் சென்றவுடன் 2 பெரிய பாறைகளுக்கு நடுவே, ஒரு ஆள் நுழையும் அளவுக்கு துளை தெரிகிறது. இந்த இடத்தை நேரடியாக நெருங்கவே முடியாது. குறுக்கிடும் பாறை ஒன்றை சுற்றிக் கொண்டு சென்றால் ‘இடுக்கு’ வழியை அடைய முடியும். சிரமப்பட்டு உடலை வளைத்து நெளித்து மேலேற வேண்டும். இடுக்கில் மழை தண்ணீர் தேங்கியிருக்கும். இதனால் பாசி படிந்து வழுக்கல் இருக்கும். அழுத்தமாக கால் வைத்து ஒரு திசையில் சென்றால் மலை உச்சியை அடையலாம். மற்றொரு திசையில் சென்றால் சமதளத்தில் குகை போன்ற இருண்ட குகை வரும். குகை முழுவதும் வவ்வால்கள் தொங்கி கொண்டிருக்கும். மனித வாடையை கண்டதும், ஆக்ரோஷமாக பாய்ந்து வரும் வவ்வால்கள் மரண பீதியை ஏற்படுத்துகின்றன. இந்த குகை எவ்வளவு தூரம் செல்கிறது, குகைக்குள் என்ன இருக்கிறது என்பது இன்று வரை புதிராகவே உள்ளது. நான்கைந்து அடி குகைக்குள் சென்றாலே தாங்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது. வவ்வால்களும் மிரட்டுகின்றன. அதனால் எவரும் செல்வது கிடையாது. சுரங்கம் போல நீண்டு செல்லும் வவ்வால் குகை, நாமக்கல் கோட்டைக்கு செல்லும் வழி என்றும் சொல்லப்படுகிறது.
முதலில் பிரியும் பாதை வழியாக சென்றால் கரட்டின் உச்சியில் சமதளம் வரும். அங்கே பெரிய குளத்தை பார்க்க முடிகிறது. பாறைகளில் நிறைய உரல் போன்ற 20 முதல் 30 துளைகள் உள்ளன. நடக்க வசதியாக சிறு, சிறு படிகள் செதுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அரண்போன்று கோட்டையின் பக்கவாட்டில் 3 மதில்கள் உள்ளன. இதன் அருகில் உட்புறத்தை ஒட்டியபடி 3 குளங்கள் உள்ளன. மழை பெய்தால் இதில் தண்ணீர் தேங்கும்படியான அமைப்பு உள்ளது. சுனையில் நீர் வற்றுவதே இல்லை. பெரிய கோட்டை இருந்ததற்கான அடையாளமாக சிதிலமடைந்த செங்கல் சுற்றுச்சுவர் ஒரு ஆள் உயரத்திற்கு உள்ளது. கூரை பகுதி முற்றிலும் அழிந்து போய் விட்டது.
 மலையின் மேல் பெரிய கற்களை வெட்டி அதன் மேல் சுட்ட செங்கற்களால் ஆன கூரை அமைத்து கட்டிய சுவர்கள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. கோட்டையின் மேற்புறத்தில் சிதைந்த நிலையில் சம பரப்பு உள்ளது. கோட்டையின் மேல் இருந்து அதே நேர் கோட்டில் உள்ள நாமக்கல் கோட்டைக்கு உயரமான தீப்பந்தம் மூலம் போர் வீரர்கள் சமிக்ஞை செய்துள்ளனர். கோட்டையின் கீழ் குளம் இருந்ததற்கான அறிகுறிகள் உள்ளன. ஆனால் அதன் சுற்றுவட்ட கற்களை காணவில்லை.
 கோட்டைக்கரடு உச்சிக்கு செல்ல 6 முறை முயற்சித்து தோற்றுப்போய் 7வது முறையாக ஆய்வுக்குழுவினர் ஏறி சிதிலமடைந்த கோட்டையை பார்வையிட்டுள்ளனர். இந்த அனுபவத்தை நினைத்தாலே உடம்பு சிலிர்க்கிறது என்கிறார் சேலம் பாராமஹால் நாணய சங்க இயக்குனர் சுல்தான். இவருடன் சேர்ந்து ராசிபுரம் சுவடி ஆய்வாளர் குமாரசாமி, இலக்கிய ஆர்வலர் சந்தியூர் கோவிந்தன் ஆகியோர் மலைக்கரடு உச்சிக்கு சென்று பார்த்துள்ளனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு பலத்த மழை பெய்த போது, கோட்டைக்கரட்டில் மண் அரிப்பு ஏற்பட்டு வாய்க்கால் வழியாக ஓடி வந்ததாகவும் அப்போது சில தங்க நாணயங்கள் கிடைத்ததாகவும் கிராமத்தினர் சிலர் கூறுகின்றனர். இதுபோல இரும்பு துகள்களும் வந்துள்ளன. இதனால் கோட்டைக்கரடு மலையில் பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கலாம் என அப்பகுதி மக்கள் உறுதியாக நம்புகின்றனர். அவ்வப்போது சிலர் ரகசிய தேடல்களிலும் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
நாச்சிபாளையம் கே.பூபதி

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க
P.T.MURUGAN - TRICHY
10/2/2025 -- 20:33:12

சமண துறவிகள் தான் பெரும்பாலும் இந்த மாதிரி பாறை குன்றுகளில் தங்கள் இருப்பிடத்தை அமைத்து கொள்வார்கள். மருந்துகள் தயாரிக்க உரல் போன்ற அமைப்புகளை பாறைகளில் இவர்கள் செதுக்கி வைத்திருப்பது வழக்கம்.குகைகளை இருப்பிடமாக கொண்டு, தூய வாழ்க்கையை வாழ்வது சமண துறவிகளின் நடைமுறை. மன்னர்கள் இந்த குன்றில் கோட்டை கட்டி வாழ்ந்ததாக எந்த சரித்திர குறிப்பும் இல்லை. குன்றின் உச்சியில் சமதள பகுதியில், குளங்கள் இருப்பதால், அங்கே சிறிய கோவில் ஒன்று இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள், திருமலை நாயக்க மன்னரின் பிரதிநிதிகளான கட்டி முதலியார், ராமச்சந்திர நாயக்கர் மற்றும் திப்பு சுல்தான், பிரிட்டிஷ் மன்னனின் பிரதிநிதிகள் என்று இந்த சேலம் பகுதி ஆளுகையில் இருந்தது. கிமுசமண துறவிகள் தான் பெரும்பாலும் இந்த மாதிரி பாறை குன்றுகளில் தங்கள் இருப்பிடத்தை அமைத்து கொள்வார்கள். மருந்துகள் தயாரிக்க உரல் போன்ற அமைப்புகளை பாறைகளில் இவர்கள் செதுக்கி வைத்திருப்பது வழக்கம்.குகைகளை இருப்பிடமாக கொண்டு, தூய வாழ்க்கையை வாழ்வது சமண துறவிகளின் நடைமுறை. மன்னர்கள் இந்த குன்றில் கோட்டை கட்டி வாழ்ந்ததாக எந்த சரித்திர குறிப்பும் இல்லை. குன்றின் உச்சியில் சமதள பகுதியில், குளங்கள் இருப்பதால், அங்கே சிறிய கோவில் ஒன்று இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள், திருமலை நாயக்க மன்னரின் பிரதிநிதிகளான கட்டி முதலியார், ராமச்சந்திர நாயக்கர் மற்றும் திப்பு சுல்தான், பிரிட்டிஷ் மன்னனின் பிரதிநிதிகள் என்று இந்த சேலம் பகுதி ஆளுகையில் இருந்தது. கிமு சமண துறவிகள் தான் பெரும்பாலும் இந்த மாதிரி பாறை குன்றுகளில் தங்கள் இருப்பிடத்தை அமைத்து கொள்வார்கள். மருந்துகள் தயாரிக்க உரல் போன்ற அமைப்புகளை பாறைகளில் இவர்கள் செதுக்கி வைத்திருப்பது வழக்கம்.குகைகளை இருப்பிடமாக கொண்டு, தூய வாழ்க்கையை வாழ்வது சமண துறவிகளின் நடைமுறை. மன்னர்கள் இந்த குன்றில் கோட்டை கட்டி வாழ்ந்ததாக எந்த சரித்திர குறிப்பும் இல்லை. குன்றின் உச்சியில் சமதள பகுதியில், குளங்கள் இருப்பதால், அங்கே சிறிய கோவில் ஒன்று இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள், திருமலை நாயக்க மன்னரின் பிரதிநிதிகளான கட்டி முதலியார், ராமச்சந்திர நாயக்கர் மற்றும் திப்பு சுல்தான், பிரிட்டிஷ் மன்னனின் பிரதிநிதிகள் என்று இந்த சேலம் பகுதி ஆளுகையில் இருந்தது. கிமுசமண துறவிகள் தான் பெரும்பாலும் இந்த மாதிரி பாறை குன்றுகளில் தங்கள் இருப்பிடத்தை அமைத்து கொள்வார்கள். மருந்துகள் தயாரிக்க உரல் போன்ற அமைப்புகளை பாறைகளில் இவர்கள் செதுக்கி வைத்திருப்பது வழக்கம்.குகைகளை இருப்பிடமாக கொண்டு, தூய வாழ்க்கையை வாழ்வது சமண துறவிகளின் நடைமுறை. மன்னர்கள் இந்த குன்றில் கோட்டை கட்டி வாழ்ந்ததாக எந்த சரித்திர குறிப்பும் இல்லை. குன்றின் உச்சியில் சமதள பகுதியில், குளங்கள் இருப்பதால், அங்கே சிறிய கோவில் ஒன்று இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள், திருமலை நாயக்க மன்னரின் பிரதிநிதிகளான கட்டி முதலியார், ராமச்சந்திர நாயக்கர் மற்றும் திப்பு சுல்தான், பிரிட்டிஷ் மன்னனின் பிரதிநிதிகள் என்று இந்த சேலம் பகுதி ஆளுகையில் இருந்தது. கிமு மூன்றாம் நூற்றாண்டில் இப்பகுதியில் கொடி கட்டி பரந்த சமண மதம் கிபி ஏழாம் நூற்றாண்டில் வலிமை குறைந்து ஒன்பதாம் நூற்றாண்டில் அறவே மறைந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சேலம் பகுதி ரோமாபுரியுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்தது. மற்றபடி அங்கு புதையல் இருப்பதாக சொல்வது சுவையான கதை தான்.

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,