இந்திய ராணுவத்தின்‘‘ஙீ’’ ‘‘சீ’’கல்விப்பிரிவில் ஹவில்தாராக (Army Educational Corps) சேர்ந்து ராணுவ வீரர்களுக்கு கல்வி கற்பிக்க பிஎட் முடித்த பட்டதாரி/முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 77. இவற்றில் அறிவியல் பிரிவுக்கு 31 , கலைப்பிரிவுக்கு 46 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. வயது: 20 லிருந்து 25க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி:Group ‘‘X’’-பிஏ, பிஎட்அல்லது பிஎஸ்சி, பிஎட் அல்லது பிசிஏ/பிஎஸ்சி, ஐடி, பிஎட் அல்லது எம்ஏ அல்லது எம்எஸ்சி முடித்திருக்க வேண்டும். Group‘‘Y’’- பிஏ அல்லது பிஎஸ்சி/பிசிஏ/பிஎஸ்சி, ஐடி, (பிஎட் தவிர) முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம் அல்லது இந்தி அல்லது இரண்டு மொழிகளிலும் பாடம் கற்பிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம்: குருப் டி பிரிவு, ஒய் பிரிவுக்கு பயிற்சியை முடித்த பின் ரூ.5,200-ரூ.20,200 சம்பள விகிதத்தில் பணியில் அமர்த்தப்படுவர். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: HQ Rtg Zone, Fort Saint George, Chennai 600009. மேலும் விவரங்களுக்கு www.indianarmy.gov.in இணையதளம் அல்லது எம்ப்ளாய்மென்ட் நியூஸ் செப்.17-23 தேதியிட்ட இதழை பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.14.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook