இந்தியாவின் நிர்வாகத் துறையை, 96 துறைகளாக பிரித்து வைத்துள்ளார்கள். இத்துறைகளை நிர்வகிக்க உயர்பதவிகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். நாட்டின் பல்வேறு துறைகளில், நிர்வாக முடிவு எடுக்கும் பதவிகளான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணிகளில் 5,500 அதிகாரிகள் உள்ளனர். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுகள், முதல்நிலைத் தேர்வு, முக்கியத் தேர்வு, நேர்முகத் தேர்வு என 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.
மாநில அரசுத் தேர்வாணையம் மூலம் குரூப் 1 தேர்வு எழுதி பணியில் சேர்வோர், 10 முதல் 15 ஆண்டுகள் பணியாற்றிய பின், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தகுதி பெற வாய்ப்பு உள்ளது. நேரடியாக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆவதன் மூலம் 15 ஆண்டுக் காலத்தை சேமிக்க முடியும். மாணவர்கள் தங்கள் திறமைகள் மீது நம்பிக்கை வைத்து படித்தால் வெற்றி பெறலாம்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்தின் மூலமோ, ஹிநிசி கிநீt 1956 ஆணையின் கீழ் அங் கீகாரம் பெற்ற நிறுவனத்தின் மூலமோ பட்டம் பெற்றிருத்தல் அல்லது அதற்கு இணையான கல்விச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். பட்டப் படிப்பு இறுதியாண்டு தேர்வு எழுதி முடிவுக்காகக் காத்திருப்பவர்களும் முதல்நிலைத் தேர்வில் கலந்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் மெயின் தேர்வு எழுத செல்லும் போது, தேர்ச்சி பெற்ற கல்விச் சான்றிதழ்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். பட்டப்படிப்புகளுக்கு இணையான டிப்ளமோ சான்றிதழ்கள் பெற்றவர்களும் இதில் அனுமதிக்கப்படுவர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook