ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சில வகையான படிப்புகள் வேலைவாய்ப்புகளில் புரட்சியை ஏற்படுத்தும். குறிப்பாக அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் துறையில் இத்தகைய மாற்றங்கள் அடிக்கடி நிகழ்வதுண்டு. இடைப்பட்ட காலத்தில் ஐடி (தகவல் தொழில்நுட்பம்) துறை மேலோங்கி இருந்தது. இத்துறை சார்ந்த படிப்புகளை மேற்கொண்டவர்களுக்கு உள்நாட்டிலேயே லட்சங்களில் ஊதியங்களை பெற்றனர். இடையில் சரிவை சந்தித்தாலும் மீண்டும் அத்துறைக்கு புத்துயிர் கிடைத்துள்ளது.
தற்போது அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் துறையில் ஒரு புதிய படிப்புக்கு மவுசு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. டிஜிட்டல் சிக்னல் புராசசிங்கும், அனலாக் சிக்னல் புராசசிங்கும் சிக்னல் புராசசிங் துறையின் பிரிவுகள். டிஜிட்டல் சிக்னல் புராசசிங்கின் கீழ் ஆடியோ அண்டு ஸ்பீச் சிக்னல் புராசசிங், சோனார் அண்டு ரேடார் சிக்னல் புராசசிங், சென்சார் அரே புராசசிங், ஸ்பெக்ட்ரல் எஸ்டிமேஷன், ஸ்டாடிஸ்டிக்கல் சிக்னல் புராசசிங், இமேஜ் புராசசிங், சிக்னல் புராசசிங் பார் கம்யூனிகேஷன் போன்ற துறைகள் வருகின்றன.
அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் துறைகளில் சிக்னல்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதயம், மூளையில் ஏற்படும் மின்மாற்றங்கள், ரேடார், சோனார் எதிரொலிகள், நிலநடுக்க அதிர்வு போன்ற ஆராய்ச்சிகளுக்கு சிக்னல்கள் தான் உதவுகின்றன. இது தொடர்பாக கிடைக்கும் தகவல்களை கம்ப்யூட்டர் உதவியுடன் புரிந்து கொள்ள டிஜிட்டல் சிக்னல் புராசசிங் உதவுகிறது.
அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் துறைகளில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் துறை என இது கருதப்படுகிறது. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்சில் சிக்னல் புராசசிங்கில் எம்.டெக்., படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளுக்கான அடிப்படை கல்வித்தகுதி, கட்டணம், மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளிட்ட விவரங்களை இக்கல்வி நிறுவனங்களின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook